உலகளாவிய விவசாய தலைமை மாநாடு இந்திய உணவு மற்றும் விவசாய அமைப்பால் (Indian Council for food and Agriculture) ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்வாகும்.
இதன் 10வது பதிப்பு புதுதில்லியில் நடத்தப்பட்டது. இந்த பதிப்பு விவசாயத் துறை சந்திக்கும் சமீபத்திய விஷயங்கள் மீது கவனம் செலுத்தும்.
இந்திய உணவு மற்றும் விவசாய அமைப்பு, சிந்தனையாளர் மன்றம், கொள்கை ஆராய்ச்சி, வர்த்தக நடைமுறையாக்கம், வளர்ச்சி மேம்பாடு, உணவு மற்றும் விவசாயத்தை கண்காணிக்கும் விஷயம் ஆகியவற்றில் ஒரு தலைமை அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இது கூட்டு ஒப்பந்தகளுக்கான உலகளாவிய அமைப்பாகவும் செயல்படுகிறது.