TNPSC Thervupettagam

11வது உலக வேலை அறிக்கை

June 5 , 2023 539 days 344 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பானது தனது 11வது ஆண்டறிக்கையை வெளியிட்டு உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில், உலகளாவிய வேலைவாய்ப்பின்மையானது 5.3% அல்லது 191 மில்லியனாகக் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்த ஆண்டில், ஆப்பிரிக்கா மற்றும் அரபு பிராந்தியத்தில் உள்ள குறைவான வருமானம் கொண்ட நாடுகள்  பெருந்தொற்றிற்கு முந்தைய வேலைவாய்ப்பின்மை நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை.
  • வட ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை, 2019 ஆம் ஆண்டில் 10.9% ஆக இருந்த வேலை வாய்ப்பின்மை விகிதமானது 2023 ஆம் ஆண்டில் 11.2% ஆக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் துணை சஹாரா பகுதியில் 5.7% ஆக இருந்த வேலை வாய்ப்பின்மை விகிதமானது 6.3% ஆகவும், 2019 ஆம் ஆண்டில் அரபு நாடுகளில் 8.7% ஆக இருந்த வேலை வாய்ப்பின்மை விகிதமானது 9.3% ஆகவும் தற்போது உள்ளது.
  • இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 2019 ஆம் ஆண்டில் 8% ஆக இருந்த வேலை வாய்ப்பின்மை விகிதமானது தற்போது 6.7% ஆக உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவில் 6.3% ஆக இருந்த வேலை வாய்ப்பின்மை விகிதமானது தற்போது 7% ஆக உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில், மத்திய மற்றும் மேற்கு ஆசியாவில் 9.2% ஆக இருந்த வேலை வாய்ப்பின்மை விகிதமானது தற்போது 7.8% ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்