TNPSC Thervupettagam

11வது CEBRன் அறிக்கை

January 3 , 2020 1660 days 725 0
  • இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையமானது (Centre for Economics and Business Research - CEBR) தனது 11வது வருடாந்திர அறிக்கையை ‘உலகப் பொருளாதாரக் குழு அட்டவணை 2020 (WELT 2020 - World Economic League Table) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின் படி, 2026 ஆம் ஆண்டிற்குள் ஜெர்மனியைப்  பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • 2034 ஆம் ஆண்டில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது.
  • அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் 3வது இடத்திற்கு போட்டியிடும் என்று இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
  • அமெரிக்கா 2020களில் உலகின் மிகப்பெரியப் பொருளாதாரமாக இருக்கும். மேலும் 2033 ஆம் ஆண்டில் சீனாவால் அமெரிக்கா பின்னுக்குத் தள்ளப்படலாம் என்றும் இந்த அறிக்கை கூறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்