TNPSC Thervupettagam

11வது KISS மனிதாபிமான விருதுகள் - 2018

May 18 , 2018 2385 days 758 0
  • உலகின் குறிப்பிடத்தகு பொருளாதார அறிஞர் (Noted economist) மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை வென்றவருமான பேராசிரியர். முஹம்மது யூனுஸ் ( Muhammad Yunus) அவர்களுக்கு 2018-ஆம் ஆண்டின் 11வது KISS மனிதாபிமான விருது (11th KISS Humanitarian Award 2018) வழங்கப்பட்டுள்ளது.
  • உலக வறுமையை ஒழிப்பதில் அவர் மேற்கொண்டு வரும் நிகரில்லா அர்ப்பணிப்பிற்கும், சமூகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டினை வளர்ப்பதற்காக அவர் ஆற்றி வரும் பங்களிப்பிற்காகவும் பேராசிரியர். முஹம்மது யூசுப்பிற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • பேராசிரியர் முஹம்மது யூசுப் வங்கதேசத்தில் கிராமின் வங்கியின் (Grameen Bank) நிறுவனராவார். இவர் சிறுநிதியியலின் தந்தை (Father of Microfinance) எனவும் பரவலாக அழைக்கப்படுகின்றார்.
  • சமூகப் பிரச்சனைகளோடு தொடர்புடைய பல்வேறு களங்களில், சமூகத்திற்காக குறிப்பிடத்தகு மாபெரும் அளப்பரிய பங்களிப்பினை ஆற்றுகின்ற நபர்களுக்கும், ஓர் உண்மையான மனிதாபிமானியாக (true humanitarian) தம்மை வேறுபடுத்திக் காட்டுகின்ற நபருக்கும் வழங்கப்படுகின்ற ஓர் புகழ்பெற்ற சர்வதேச விருதே KISS மனிதாபிமான விருதாகும்.
  • KISS சர்வதேச மனிதாபிமான விருதானது ஒடிஸாவின் புவனேஸ்வரில் அமைந்துள்ள சமூக அறிவியலுக்கான கலிங்கா நிறுவனத்தின் (Kalinga Institute of Social Sciences -KISS) நிறுவனரான டாக்டர் அக்யூதா சமந்தாவால் (Achyuta Samanta) 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்