உலகின் குறிப்பிடத்தகு பொருளாதார அறிஞர் (Noted economist) மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை வென்றவருமான பேராசிரியர். முஹம்மது யூனுஸ் ( Muhammad Yunus) அவர்களுக்கு 2018-ஆம் ஆண்டின் 11வது KISS மனிதாபிமான விருது (11th KISS Humanitarian Award 2018) வழங்கப்பட்டுள்ளது.
உலக வறுமையை ஒழிப்பதில் அவர் மேற்கொண்டு வரும் நிகரில்லா அர்ப்பணிப்பிற்கும், சமூகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டினை வளர்ப்பதற்காக அவர் ஆற்றி வரும் பங்களிப்பிற்காகவும் பேராசிரியர். முஹம்மது யூசுப்பிற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் முஹம்மது யூசுப் வங்கதேசத்தில் கிராமின் வங்கியின் (Grameen Bank) நிறுவனராவார். இவர் சிறுநிதியியலின் தந்தை (Father of Microfinance) எனவும் பரவலாக அழைக்கப்படுகின்றார்.
சமூகப் பிரச்சனைகளோடு தொடர்புடைய பல்வேறு களங்களில், சமூகத்திற்காக குறிப்பிடத்தகு மாபெரும் அளப்பரிய பங்களிப்பினை ஆற்றுகின்ற நபர்களுக்கும், ஓர் உண்மையான மனிதாபிமானியாக (true humanitarian) தம்மை வேறுபடுத்திக் காட்டுகின்ற நபருக்கும் வழங்கப்படுகின்ற ஓர் புகழ்பெற்ற சர்வதேச விருதே KISS மனிதாபிமான விருதாகும்.
KISS சர்வதேச மனிதாபிமான விருதானது ஒடிஸாவின் புவனேஸ்வரில் அமைந்துள்ள சமூக அறிவியலுக்கான கலிங்கா நிறுவனத்தின் (Kalinga Institute of Social Sciences -KISS) நிறுவனரான டாக்டர் அக்யூதா சமந்தாவால் (Achyuta Samanta) 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.