திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சோழர் காலத்தினைச் சேர்ந்த சிதிலமடைந்த ஒரு கோயிலைக் குறிக்கும் கல்வெட்டுகளை இரண்டு கல்வெட்டு வல்லுநர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இது சோழர் காலத்தில் இருந்த ஒரு பழமையான கோவிலைக் குறிக்கிறது.
இந்த அழிந்து போன கோவிலின் காலம் கிபி 11 ஆம் நூற்றாண்டு என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சியின் போது, திரு அயோத்தியாழ்வார் கோயில் மண்டபத்தில், கிராம நிர்வாகக் குழு கூடி நிர்வாகப் பணிகள் மேற்கொள்வது பற்றி விவாதித்ததாக இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.