தமிழ்நாடு தொல்லியல் துறையானது விஷ்ணு கோவிலில் வளங்காப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் அருகே அமைந்த உலகபுரத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்.
இந்தக் கோயில் கி.பி 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிற நிலையில், அப்போது இந்தக் கிராமம் உலகமாதேவிபுரம் என்று அழைக்கப்பட்டது.
இது சோழ மன்னன் முதலாம் இராஜ இராஜனின் இராணியின் பெயரால் அழைக்கப் படுகிறது.
இக்கோயிலில் சோழ மன்னன் முதலாம் இராஜேந்திரனின் கல்வெட்டுகள் காணப் படுவதோடு, மேலும் அந்தக் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் பற்றிய பல பதிவுகளும் அங்கு உள்ளன.