TNPSC Thervupettagam

11-வது WTO அமைச்சர்கள் மாநாடு

December 11 , 2017 2571 days 1000 0
  • உலக வர்த்தக நிறுவனத்தின் (World Trade Organisation) 11-வது WTO அமைச்சர்கள் மாநாடு 2011-ஆம் ஆண்டின் டிசம்பர் 11 முதல் 13 வரை அர்ஜென்டினாவின் பியூனேஸ் ஏரேஸ் நகரில் நடைபெற உள்ளது.
  • அர்ஜென்டீனிய அமைச்சர் சுசானா மல்கோரா இம்மாநாட்டிற்கு தலைமை தாங்க உள்ளார்.
  • இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை கூட்டப்படும் இம்மாநாட்டை முதல் தென் அமெரிக்க நாடாக அர்ஜென்டினா நடத்த உள்ளது.
  • WTO அமைச்சர் மாநாடானது WTO-வின் உச்ச முடிவு எடுக்கும் அமைப்பாகும்.
  • இம்மாநாடு வழக்கமாக இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டப்படும்.
  • WTO-வின் 164 உறுப்பு நாடுகளின் மூத்த அதிகாரிகள் மற்றும் வர்த்தக அமைச்சர் இந்த WTO அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வர்.
  • இதற்கு முந்தைய மாநாடு 2015, டிசம்பரில் கென்யத் தலைநகர் நைரோபியில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்