தூய குடிநீரை அளிப்பதற்காக மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம்5 உயர் லட்சிய மாவட்டங்களில் சுவாஜல் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது.
இத்திட்டம் ஏற்கெனவே உள்ள தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் வரவு செலவுக் கணக்கிலிருந்து தேவைக்கேற்ப பயன்படும் நிதிகளின் மூலம் 700 கோடி செலவீடுகளைக் கொண்டிருக்கும்.
சுவாஜல் என்பது நீடித்த குடிநீர் வழங்கலுக்காக சமூகத்தால் நிறைவேற்றப்படும் குடிநீர் திட்டமாகும்.
இதன் கீழ் இத்திட்டத்தின் 90 சதவிகித செலவுகளானது அரசால் மேற்கொள்ளப்படும். 10 சதவிகித செலவுகளானது பயனடையும் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.