இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையமானது (Centre for Economics and Business Research - CEBR) தனது 11வது வருடாந்திர அறிக்கையை ‘உலகப் பொருளாதாரக் குழு அட்டவணை 2020′ (WELT 2020 - World Economic League Table) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, 2026 ஆம் ஆண்டிற்குள் ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
2034 ஆம் ஆண்டில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது.
அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் 3வது இடத்திற்கு போட்டியிடும் என்று இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா 2020களில் உலகின் மிகப்பெரியப் பொருளாதாரமாக இருக்கும். மேலும் 2033 ஆம் ஆண்டில் சீனாவால் அமெரிக்கா பின்னுக்குத் தள்ளப்படலாம் என்றும் இந்த அறிக்கை கூறுகின்றது.