TNPSC Thervupettagam

11வது ஆசிய காற்று துப்பாக்கி சாம்பியன்ஷிப்

November 14 , 2018 2076 days 673 0
  • குவைத் நாட்டின் குவைத் நகரில் உள்ள ஷேக் சபா அல் அஹ்மத் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் வளாகத்தில் 11வது ஆசிய காற்று துப்பாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
  • இந்தியாவைச் சேர்ந்த இளையோர் துப்பாக்கி சுடும் வீரர்கள் 4 தங்கம், 5 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் உட்பட 11 பதங்கங்களை வென்றனர்.
  • மனு பாஸ்கர் மற்றும் சவுரப் சவுத்ரி ஆகியோர் 10 மீட்டர் ரைபிள் கலப்புக் குழு பிரிவில் தங்கம் வென்றனர்.
  • இவர்கள் 485.4 புள்ளிகளைப் பெற்று இளையோர் உலக சாதனையை தகர்த்தனர்.
  • இளவேனில் வாளறிவன் & ஹிருதய் ஹஜரிகா – தங்கம் (10 மீ ரைபிள் கலப்பு இளையோர் அணி).
  • சவுரப் சவுத்ரி - தங்கம் (10 மீ காற்று துப்பாக்கி ஆடவர் இளையோர்)
  • சவுரப் சவுத்ரி, அர்ஜூன் சிங் சீமா & அன்மோல் ஜெயின் - தங்கம் (10 மீ காற்று துப்பாக்கி இளையோர் குழு)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்