சர்வதேச தொழிலாளர் அமைப்பானது தனது 11வது ஆண்டறிக்கையை வெளியிட்டு உள்ளது.
2023 ஆம் ஆண்டில், உலகளாவிய வேலைவாய்ப்பின்மையானது 5.3% அல்லது 191 மில்லியனாகக் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த ஆண்டில், ஆப்பிரிக்கா மற்றும் அரபு பிராந்தியத்தில் உள்ள குறைவான வருமானம் கொண்ட நாடுகள் பெருந்தொற்றிற்கு முந்தைய வேலைவாய்ப்பின்மை நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை.
வட ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை, 2019 ஆம் ஆண்டில் 10.9% ஆக இருந்த வேலை வாய்ப்பின்மை விகிதமானது 2023 ஆம் ஆண்டில் 11.2% ஆக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் துணை சஹாரா பகுதியில் 5.7% ஆக இருந்த வேலை வாய்ப்பின்மை விகிதமானது 6.3% ஆகவும், 2019 ஆம் ஆண்டில் அரபு நாடுகளில் 8.7% ஆக இருந்த வேலை வாய்ப்பின்மை விகிதமானது 9.3% ஆகவும் தற்போது உள்ளது.
இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 2019 ஆம் ஆண்டில் 8% ஆக இருந்த வேலை வாய்ப்பின்மை விகிதமானது தற்போது 6.7% ஆக உள்ளது.
2019 ஆம் ஆண்டில் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவில் 6.3% ஆக இருந்த வேலை வாய்ப்பின்மை விகிதமானது தற்போது 7% ஆக உள்ளது.
2019 ஆம் ஆண்டில், மத்திய மற்றும் மேற்கு ஆசியாவில் 9.2% ஆக இருந்த வேலை வாய்ப்பின்மை விகிதமானது தற்போது 7.8% ஆக உள்ளது.