இரு ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் ராஷ்டிரிய ரைபிள் கருத்தரங்கின் 11-வது பதிப்பு 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 26 முதல் 29-வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நக்ரோட்டாவில் நடத்தப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கிற்கு ராணுவத்தின் தலைமைத் தளபதி (Chief of the Army staff) தலைமை தாங்கினார்.
ராஷ்ட்ரிய ரைபிள் படையானது மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற, இந்திய இராணுவப் படையின் ஓர் பிரிவாகும்.
இந்திய இராணுவத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படையானது ஓர் பயங்கரவாத எதிர்ப்பு படையாகும்.
இப்படை தற்போது நடப்பில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளது