TNPSC Thervupettagam

12வது மஹாரத்னா நிறுவனம்

September 27 , 2022 790 days 397 0
  • REC (ஊரக மின்சார வசதியளிப்புக் கழகம்) லிமிடெட் நிறுவனத்திற்கு ‘மஹாரத்னா’ மத்திய பொதுத்துறை நிறுவன அந்தஸ்து ஆனது வழங்கப்பட்டுள்ளது.
  • இது அந்த நிறுவனத்திற்கு என்று அதிகச் செயல்பாட்டு மற்றும் நிதி சார்ந்தச் சுயாட்சி அதிகாரத்தினை வழங்குகிறது.
  • 'மஹாரத்னா' அந்தஸ்து வழங்கப்படுதல் என்பது ஒரு நிறுவனத்தின் வாரியமானது நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும் போது அதிக மேம்பட்ட அதிகாரங்கள் அதற்கு வழங்கப் படுதல் என்பதாகும்.
  • REC லிமிடெட் நிறுவனமானது, மஹாரத்னா அந்தஸ்து பெற்ற 12வது நிறுவனமாகும்.
  • தேவையான கூறுகள்
    • தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு 5,000 கோடி நிகர இலாபம் ஈட்டுகின்ற மத்திய பொதுத் துறை நிறுவனம்
    • தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு, ரூ.25,000 கோடி சராசரி ஆண்டு வருவாய் ஈட்டும் நிறுவனம் மற்றும்
    • தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு சராசரியாக ரூ.15,000 கோடி நிகர மதிப்பைப் பதிவு செய்யும் நிறுவனம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்