TNPSC Thervupettagam

12 பாதுகாக்கப்பட்ட தளங்கள் – தமிழ்நாடு

April 21 , 2025 4 days 102 0
  • மொத்தம் 12 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் /தளங்களாக அறிவிக்கப்பட உள்ளன.
  • பின்வரும் இடங்கள் ஆனது பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் / தளங்களாக அறிவிக்கப்பட உள்ளன:
    • திருநெல்வேலி மாவட்டத்தின் மன்னார்கோயிலில் உள்ள தமிழி கல்வெட்டுகள்,
    • சிவகங்கை மாவட்டம் அரளிப்பட்டியில் உள்ள குடைவரை,
    • திண்டுக்கல் மாவட்டத்தில் கூத்தபூண்டியன் வலசு,
    • புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள V.கோட்டையூர்,
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மல்லச்சந்திரத்தில் உள்ள கல் திட்டைகள்,
    • இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள அரண்மனை
    • நரிக்குடியில் உள்ள மறையூர் சத்திரம் மற்றும் இராஜபாளையம் தாலுக்காவில் உள்ள மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள கற்பாறை மற்றும் குகை ஓவியங்கள்,
    • விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் மற்றும் பிள்ளையார் நத்தத்தில் உள்ள பழைய மண்டபங்கள்
    • திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏவூர், மற்றும்
    • விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாயனூர்
  • மதுரையில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டுகளுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்