மத்திய நிதித் துறை அமைச்சகமானது 12 பொதுத் துறை வங்கிகளில் ரூ. 48,239 கோடி மதிப்பிலான மூலதன உட்செலுத்துதலை அறிவித்துள்ளது.
இது ஒழுங்குமுறை மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் மிகப்பெரிய அளவில் கடன்களை அளிப்பவர்களுக்குத் தேவையான மூலதன வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் உதவும்.
உடனடி சரிபார்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்பில் (Prompt Corrective Action - PCA) ரிசர்வ் வங்கியானது வரம்பு நிர்ணயித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த மூலதனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 31, தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கியானது பேங்க் ஆப் இந்தியா, மகாராஷ்டிரா வங்கி மற்றும் ஒரியண்டல் வணிக வங்கி ஆகிய வங்கிகளை PCA கட்டமைப்பிலிருந்து நீக்கியுள்ளது.