TNPSC Thervupettagam

1200 ஆண்டுகள் பழமையான நுண்ணிய ஸ்தூபிகள்

January 20 , 2023 675 days 394 0
  • இந்தியத் தொல்லியல் துறையானது (ASI), 'நாளந்தா மகாவிஹாரா' வளாகத்தில் உள்ள சாராய் திலா சிகரப் பகுதிக்கு அருகில், 1200 ஆண்டுகள் பழமையான இரண்டு சிறு வடிவ வழிபாட்டு ஸ்தூபிகளைக் கண்டுபிடித்துள்ளது.
  • புத்தர் உருவங்களைச் சித்தரிக்கும் வகையில் கல்லில் செதுக்கப்பட்ட இவை, 1200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக் கூடும்.
  • இந்தியாவில் கிபி 7 ஆம் நூற்றாண்டு முதல், சிறிய நுண்ணிய டெரகோட்டா வகை ஸ்தூபிகள் வழிபாட்டுக் காணிக்கைப் பொருள்களாகப் பிரபலமடைந்தன.
  • நாளந்தா மகாவிஹாரா தளமானது கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரையிலான ஒரு மடாலயம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தொல் பொருள் சார்ந்த எஞ்சியப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
  • இதில் ஸ்தூபிகள், ஆலயங்கள், விகாராக்கள் (குடியிருப்பு மற்றும் கல்விக் கட்டிடங்கள்) மற்றும் ஸ்டக்கோ வகை, கல் மற்றும் உலோகத்திலான பல்வேறு முக்கியமான கலைப் படைப்புகளும் இங்குள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்