121 ஆண்டுகளில் இல்லாத அளவில் சராசரியாக, மார்ச் மாதத்தில் மிக வெப்பமான நாட்கள் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறையின் ஒரு பகுப்பாய்வு கூறுகிறது.
நாடு முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை என்பது, இயல்பை விட 1.86 டிகிரி செல்சியஸ் நிலையைத் தாண்டியுள்ளது.
பெரும்பாலும் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள அதிகபட்ச வெப்ப நிலையில் மிக அதிகமான விலக்கல்கள் காரணமாக இந்த வெப்பநிலையானது பதிவு ஆகி உள்ளது.
மழைப்பொழிவு இல்லாத நிலை மற்றும் மத்திய & வடமேற்கு இந்தியாவில் வீசும் சூடான மற்றும் வறண்ட மேற்குக் காற்று ஆகியவையே இதற்கான முதன்மைக் காரணங்களாகும்.