TNPSC Thervupettagam

123 ஆண்டுகளில் பதிவான ஆறாவது வறட்சியான அக்டோபர் மாதம்

November 4 , 2023 387 days 340 0
  • 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கேரளாவில் 1% அதிக மழை பெய்துள்ளது.
  • தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் கடந்த 123 ஆண்டுகளில் ஆறாவது வறட்சியான அக்டோபர் மாதத்தினை எதிர் கொண்டன.
  • இப்பகுதிகளில் அக்டோபர் மாதத்தில் 74.9 மி.மீ. மழை மட்டுமே பெய்த நிலையில், இது இயல்பை விட 60 சதவீதம் குறைவாகும்.
  • இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் சுமார் 9.9 செ.மீ மழை மட்டுமே பெய்துள்ளது.
  • 1901 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரையில், அக்டோபர் மாதத்தில் பதிவான ஒன்பதாவது மிகக் குறைவான மழைப்பொழிவு இதுவாகும்.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தான் அக்டோபர் மாதத்தில் அதிகமாக 116% பருவ மழை பெய்துள்ளது.
  • அதன் இயல்பான மழைப்பொழிவு அளவான 17.1 செமீக்கு பதிலாக, சுமார் 42% மழைப் பற்றாக்குறையுடன் அம்மாதம் நிறைவடைந்தது.
  • தென்மேற்குப் பருவமழையானது கடந்த சில ஆண்டுகளைப் போலன்றி, இந்த ஆண்டில் 134 நாள் அளவிலான பருவத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட சரியான நேரத்தில் முடிவடைந்தது.
  • குறிப்பிடத்தக்க வகையில், தெற்கு தீபகற்பத்தின் வறட்சியான ஆறு அக்டோபர் மாதங்களில், 2023, 2016 மற்றும் 1988 ஆகிய ஆண்டுகளின் அக்டோபர் மாதங்கள் எல் நினோ ஆண்டுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்