சீனாவின் மாண்டரின் மொழியை பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் (Official Language) ஒன்றாக அறிவிப்பதற்கான தீர்மானத்திற்கு பாகிஸ்தானின் செனேட் அவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாகிஸ்தானிய பஞ்சாப் மாகாணத்தின் பஞ்சாபி மொழியும், பஷ்தோ (Pashto) மற்றும் பல்வேறு பிற பூர்வீக மொழிகளும் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் மிகுதியாக பேசப்பட்டாலும் இதுவரை அவை அதிகாரப்பூர்வ மொழிகளாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.