TNPSC Thervupettagam

யுனிசெப் அறிக்கை - இந்தியா

February 25 , 2018 2338 days 832 0
  • அண்மையில் வெளியிடப்பட்டுள்ள புதிய யுனிசெப் அறிக்கைப்படி, இந்தியாவில் பச்சிளங்குழந்தைகள் இறப்பு வீதம் (Neonatal Mortality rate) 1000 உயிர் பிறப்புகளுக்கு4 இறப்புகள் (25.4 deaths per 1,000 live births) என்ற அளவில் உள்ளது.
  • 1000 உயிர் பிறப்புகளுக்கு எத்தனை குழந்தைகள் பிறந்த 28 நாட்களுக்குள் இறக்கின்றன என்பதை அளவிடும் முறையே பச்சிளங்குழந்தைகள் இறப்பு வீதம் ஆகும்.
  • உலக அளவில் 6 மில்லியன் குழந்தைகள் பிறந்த 28 நாட்களுக்குள் இறந்துள்ளன.
  • இந்தியாவில் 2016-ல் 6 இலட்சம் குழந்தைகள் பிறந்த 28 நாட்களுக்குள் இறந்துள்ளன.
  • இதனால் குறைவான மத்திய தர வருமானமுடைய (lower middle-income countries) 52 நாடுகளுள் இந்தியா 12வது நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் அண்டைநாடுகளான வங்கதேசம் 54-வது இடத்திலும், நேபாளம் 50-வது இடத்திலும், இலங்கை 127 ஆவது இடத்திலும் உள்ளன.
  • வங்கதேசம், நேபாளம், ருவாண்டா போன்ற வறிய நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின் தங்கிய தரவரிசையைப் பெற்றுள்ளது.
  • மேலும் ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளுள் அதிகம் இறப்பு வீதத்தை கொண்ட உலகின் ஒரே வளரும் முக்கிய நாடாக இந்தியா பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் கோவா மற்றும் கேரளாவில் 1000 உயிர் பிறப்புகளுக்கு 10 இறப்புகள் என்ற அளவில் பச்சிளங்குழந்தை இறப்பு வீதம் உள்ளது.
  • இதுவே பீகார் மற்றும் உத்தரகாண்டில் அதிகபட்சமாக 1000 உயிர் பிறப்புகளுக்கு 44 இறப்புகள் என்ற அளவில் உள்ளது.
  • மேலும் 2030 ஆண்டு எட்ட வேண்டி நிர்ணயிக்கப்பட்ட நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளில் ஆரோக்கியத்திற்கான இலக்கின்படி இந்தியா அடைய நினைத்த 1000 உயிர் பிறப்புகளுக்கு வெறும் 12 இறப்புகள் என்ற இலக்கை எட்டும் நிலையில், அதற்கான வழித் தடத்தில் இந்தியா தற்போது இல்லை எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • அதிக வருவாய் உடைய நாடுகளைக் காட்டிலும் குறைந்த வருவாயுடைய நாடுகளுள் சராசரி பச்சிளங்குழந்தைகள் இறப்பு வீதம் 9 மடங்கு அதிகமாக உள்ளது.
  • குறைந்த வருமானமுடைய நாடுகளில் பச்சிளங்குழந்தைகள் இறப்பு வீதம் 1000 உயிர் பிறப்புகளுக்கு 27 இறப்புகள் என்ற அளவில் உள்ளது.

யுனிசெப் பற்றி

  • ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசரநிதியமானது (United Nations International Children Emergency Fund) ஐ.நா.வின் சிறப்பு திட்ட அமைப்பாகும்.
  • இதன் தலைமையகம் நியூயார்க்கில் அமைந்துள்ளது.
  • இது ஐ.நா. மேம்பாட்டு குழுவின் (UNDG - United Nations Development Group) உறுப்பினராகும்.
  • இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு உணவு மற்றும் மருத்துவ ஆரோக்கிய சேவைகளை அளிப்பதற்காக 1946ஆம் ஆண்டு ஐ.நா. பொது அவையால் இந்நிதியம் அமைக்கப்பட்டது.
  • குழந்தைகளின் பொது நல்வாழ்வு, ஊட்டச்சத்து, ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை அதிகரிப்பதற்காக உலக நாடுகளின் தேசிய அளவிலான முயற்சிகளுக்கு உதவி புரிவதற்காக இந்நிதியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்