TNPSC Thervupettagam

129வது அரசியலமைப்பு திருத்த மசோதா

December 21 , 2024 7 days 73 0
  • மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை அனுமதிக்கும் இரண்டு மசோதாக்கள் மக்களவையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • இது பின்வரும் சரத்துகளை உட்சேர்க்க/திருத்த முயல்கிறது
    • 82A என்ற புதிய சரத்து சேர்ப்பு- மக்களவை (லோக்சபா) மற்றும் அனைத்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்.
    • 83வது சரத்தில் திருத்தம் - பாராளுமன்ற அவைகளின் செயல்பாட்டுக் காலம்,
    • 172வது சரத்தில் திருத்தம்- மாநிலச் சட்டமன்றங்களின் செயல்பாட்டுக் காலம் மற்றும்
    • 327வது சரத்தில் திருத்தம் - சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் தொடர்பான விதிமுறைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்றத்தின் அதிகாரம்.
  • ஒரு அரசியலமைப்பு திருத்த மசோதாவினை அறிமுகப் படுத்த அங்கு ஒரு சாதாரணப் பெரும்பான்மை இருந்தால் போதும், ஆனால் அந்த அவையில் அது நிறைவேற்றப் பட அதற்குச் சிறப்புப் பெரும்பான்மை தேவைப்படும்.
  • ஒரு கணக்கின் படி மக்களவையில் அன்றைய தினம் இருந்த 461 வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கிலான பெரும்பான்மை (307) என்பது அதற்குத் தேவையாக இருந்தது.
  • இந்த மசோதாவினை மக்களவையில் அறிமுகப் படுத்துவதற்கென 263 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில் 198 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
  • புதிய பாராளுமன்றத்தில் மின்னணு வாக்குப் பதிவு முறை அறிமுகப் படுத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்