TNPSC Thervupettagam

129வது துராந்த் கோப்பை – கேரளா அணி வெற்றி

August 27 , 2019 1791 days 627 0
  • கொல்கத்தாவின் உப்பு ஏரி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து இறுதி ஆட்டத்தில் கோகுலம் கேரள FC அணியானது மேற்கு வங்காளத்தின் மோகன் பாகன் அணியை வீழ்த்தி 2019 ஆம் ஆண்டின் துராந்த் கால்பந்துக் கோப்பையை வென்றது.
  • கோகுலம் கேரளா FC அணியின் அறிமுகத் தொடர் இதுவாகும்.
  • கோகுலம் கேரளா FC முன்னணி மற்றும் மார்கஸ் ஜோசப் ஆகியோரால் முறையே தங்கப் பந்து மற்றும் தங்கக் காலணி விருது வெல்லப்பட்டது.
  • தங்கக் கையுறையானது அதே அணியைச் சேர்ந்த கோல்கீப்பரான CK உபாய்டு என்பவரால் வெல்லப்பட்டது.
  • துராந்த் கோப்பை அல்லது துராந்த் கால்பந்துத் தொடர் என்பது 1888 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு கால்பந்துப் போட்டித் தொடராகும்.
  • இது ஆசியாவின் மிகப் பழமையான கால்பந்துத் தொடராகும். இது உலகில் 3வது மிகப் பழமையான கால்பந்துத் தொடராகும்.
  • இது துராந்த் கால்பந்து தொடர் சமூகம் மற்றும் ஓசியன்ஸ் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்