உத்தமசீலியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது 12வது நூற்றாண்டைச் சேர்ந்த பாறைக் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உத்தமசீலி திருச்சி அருகேயுள்ள ஒரு குக்கிராமமாகும்.
அந்த பாறைக்கல்வெட்டு மகிஷாசுரமர்த்தினி என்ற பெண் கடவுளின் உருவத்தை மிகச்சிறிய அளவில் பிரதிபலிக்கின்ற வடிவில் உள்ளது.
மேலும் அக்கோவிலில் நரசிம்மக் கடவுள் தனது மனைவியருடன் யோகாசனத்தில் உள்ள நிலையில் செவ்வக வடிவிலான பீடத்தில் அமர்ந்தவாறு உள்ள சிலை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
டாக்டர் ராஜமாணிக்கனார் வரலாற்று மையத்தைச் சேர்ந்த குழு விக்ரம சோழனின் கல்வெட்டு ஒன்றை சிதைந்த நிலையில் கண்டெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சாளுக்கிய சோழ மரபினை உருவாக்கிய முதலாம் குலோத்துங்க சோழனின் மகன் விக்ரம சோழன் ஆவார்.