13 நகராட்சிகள் உருவாக்கம்
January 3 , 2025
4 days
90
- தமிழக அரசானது, எண்ணற்ற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பதற்காக என முன்மொழியப்பட்டுள்ள வரையறைகளை அறிவித்துள்ளது.
- இதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் அதிக எண்ணிக்கையிலான கிராமப் பஞ்சாயத்துகளை இணைப்பது உள்ளிட்டவை அடங்கும்.
- 13 நகராட்சிகள் மற்றும் 25 நகரப் பஞ்சாயத்துகளை உருவாக்குவது குறித்தும் இந்த முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- முன்மொழியப்பட்டுள்ள இந்தப் புதிய நகராட்சிகளில் கன்னியாகுமரி, அரூர் மற்றும் பெருந்துறை ஆகியவை அடங்கும்.
- ஏற்காடு, காளையார்கோயில், திருமயம் உள்ளிட்ட 25 பேரூராட்சிகளை உருவாக்க அரசு முன்மொழிந்துள்ளது.
- இது தவிர, 29 கிராமப் பஞ்சாயத்துகள், 25 பேரூராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ளன.
Post Views:
90