13 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதை படிவம் - மனிதக் குரங்கினம்
September 16 , 2020 1535 days 753 0
2015 ஆம் ஆண்டில் உத்தரகண்ட்டின் ராம்நகரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கடைவாய்ப் பல் புதைபடிவமானது பண்டைய நீண்டைய கைகளை உடைய முந்தைய காலக் குரங்கு வகையைச் சேர்ந்ததாகும்.
இந்தப் புதை படிவமானது 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவிற்கு இடம்பெயர்ந்த பெரிய வகை மனிதக் குரங்குகளின் (மனிதக் குரங்குகள், ஆப்பிரிக்கக் குரங்கு வகை, ஓரங்குட்டான்கள், போனோபோன்கள், மனிதர்கள்) இடப்பெயர்வைப் புரிந்து கொள்ள ஆதாரமாக விளங்குகின்றது.
இந்தப் புதை படிவமானது கீழ் கடைவாய்ப் பல்லின் ஒரு முழு பகுதியாகும். இது இதற்கு முன்பு அறியப்படாத பேரினம் மற்றும் உயிரினங்கள் வகையைச் சேர்ந்தது ஆகும். இது தற்பொழுது கபி ராம்நகரென்சிஸ் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
ஏறத்தாழ 1 நூற்றாண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது மனிதக் குரங்கினம் இதுவாகும்.
இது குறைந்தது 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான மனிதக் குரங்கு வகைக்கு முந்தைய காலக் கட்டத்தைச் சேர்ந்தது ஆகும்.