தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் 13வது பதிப்பானது நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள தசரத் அரங்கில் நடத்தப்பட்ட தொடக்க விழாவிற்குப் பிறகு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
நேபாள நாட்டு அதிபரான பித்யா தேவி பண்டாரி என்பவர் இந்த விளையாட்டுகள் தொடங்கப்பட்டதாக அறிவித்தார்.
தெற்காசிய விளையாட்டுக்கள் (முன்னர் தெற்காசியக் கூட்டமைப்பு விளையாட்டு) என்பது தெற்காசியாவைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்களிடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பல்வேறு விளையாட்டுகளைக் கொண்ட நிகழ்வாகும்.
இதுபோன்ற ஒரு முதலாவது போட்டியானது நேபாளத்தில் உள்ள காத்மாண்டு நகரத்தினால் 1984 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.