TNPSC Thervupettagam

14-ஆவது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்

July 26 , 2017 2549 days 948 0
  • நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் (71) பதவியேற்றார். குடியரசுத் தலைவர் பதவிக்கு கடந்த 17-ஆம்தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமாரைத் தோற்கடித்தார். கோவிந்த் 65 சதவீத வாக்குகளுடன்வெற்றி பெற்றார்.
  • இந்நிலையில், புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் ஜூலை 26, 2017 அன்றுபதவியேற்றார். அவருக்கு தில்லியில் நாடாளுமன்ற வளாத்தில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
  • உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக 1994 முதல் 2006 வரை இருமுறை தொடர்ச்சியாகப் பதவிவகித்தார். பீகார் ஆளுநராக இருந்த அவர், அண்மையில் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
  • மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணனுக்குப் பிறகு இந்த உயர்பதவிக்கு வந்துள்ள தலித்சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைவர் ராம்நாத் கோவிந்த்ஆவார். பாஜகவைச் சேர்ந்த ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்