14 காரீஃப் பருவ பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு
June 23 , 2024 157 days 240 0
ஜூலை மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 2024-25 ஆம் ஆண்டின் பயிர் பருவத்திற்கான அனைத்து 14 காரீஃப் பருவப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எண்ணெய் வித்துக்களான காட்டு எள் மற்றும் எள் ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அதிக அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வானது ₹983 மற்றும் ₹632 உயர்த்தப்பட்டு, முறையே குவிண்டாலுக்கு ₹8,717 ஆகவும் ₹9,267 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
துவரை அல்லது அர்ஹர் (புறா பட்டாணி) போன்ற பருப்பு வகைகளுக்குமான குறைந்த பட்ச ஆதரவு விலையானது கடந்த ஆண்டை விட சுமார் 550 ரூபாய் அதிகரித்து ஒரு குவிண்டாலுக்கு 7,550 ரூபாயாக இருந்தது.
எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை, சூரியகாந்தி விதை மற்றும் மஞ்சள் சோயா அவரை ஆகியவற்றிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையானது முறையே ₹406, ₹520 மற்றும் ₹292 உயர்ந்துள்ளது.
விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திச் செலவில் எதிர்பார்க்கப்படும் லாப வரம்பு ஆனது கம்பு (77%) மற்றும் துவரை (59%), மக்காச்சோளம் (54%) மற்றும் உளுந்து (52%) ஆகியவற்றிற்கு மிக அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.