TNPSC Thervupettagam

14 காரீஃப் பருவ பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு

June 23 , 2024 157 days 238 0
  • ஜூலை மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 2024-25 ஆம் ஆண்டின் பயிர் பருவத்திற்கான அனைத்து 14 காரீஃப் பருவப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • எண்ணெய் வித்துக்களான காட்டு எள் மற்றும் எள் ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அதிக அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்த விலை உயர்வானது ₹983 மற்றும் ₹632 உயர்த்தப்பட்டு, முறையே குவிண்டாலுக்கு ₹8,717 ஆகவும் ₹9,267 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
  • துவரை அல்லது அர்ஹர் (புறா பட்டாணி) போன்ற பருப்பு வகைகளுக்குமான குறைந்த பட்ச ஆதரவு விலையானது கடந்த ஆண்டை விட சுமார் 550 ரூபாய் அதிகரித்து ஒரு குவிண்டாலுக்கு 7,550 ரூபாயாக இருந்தது.
  • எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை, சூரியகாந்தி விதை மற்றும் மஞ்சள் சோயா அவரை ஆகியவற்றிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையானது முறையே ₹406, ₹520 மற்றும் ₹292 உயர்ந்துள்ளது.
  • விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திச் செலவில் எதிர்பார்க்கப்படும் லாப வரம்பு ஆனது கம்பு (77%) மற்றும் துவரை (59%), மக்காச்சோளம் (54%) மற்றும் உளுந்து (52%) ஆகியவற்றிற்கு மிக அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்