1,400 கி.மீ நீளமுள்ள இந்தியாவின் மிகப்பெரிய ‘பசுமைச் சுவர்’
October 9 , 2019 1877 days 761 0
குஜராத்திலிருந்து தில்லி - ஹரியானா எல்லை வரை 1,400 கி.மீ நீளமும் 5 கி.மீ அகலமும் கொண்ட ஒரு பசுமைச் சுவரை உருவாக்கும் ஒரு லட்சியத் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.
இது காலநிலை மாற்றம் மற்றும் பாலைவனமாக்கல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு திட்டமாகும்.
இந்தப் பசுமைச் சுவரானது தொடர்ச்சியாக இருக்காது. ஆனால் இது தோராயமாக போர்பந்தர் முதல் பானிப்பட் வரையில் உள்ள சீரழிந்து கிடக்கும் ஆரவல்லி மலையை முழுமையாக உள்ளடக்க இருக்கின்றது.
இது ஆப்பிரிக்காவின் டாக்கர் (செனகல்) முதல் டிஜிபோடி வரை செல்லும் “மிகப்பெரிய பசுமைச் சுவரின்” வரிசையில் அமைக்கப்பட இருக்கின்றது.