TNPSC Thervupettagam

145 பில்லியன் ஆண்டுகள் பழமையான தொல்பொருள்

November 9 , 2017 2602 days 958 0
  • 145 மில்லியன் ஆண்டுகள் பழமையான எலி போன்ற உயிரினத்தின் தொல்படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவையே மனித இனத்தின் மிகவும் பழமையான பாலூட்டி மூதாதையர்கள் எனக் கருதப்படுகின்றன.
  • இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் டார்ஸட் நாட்டின் ஜீராஸிக் கடற்கரையில் இந்தப் படிமங்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்த பாலூட்டிகளின் வரிசையில் இந்த உயிரினம் மிகப் பழமையானதாகும்.
  • இந்தப் பாலூட்டி வகைகள் காலப்போக்கில் மிகச் சிறிய பிக்மீ ஷ்ரூ (pigmy shrews) எலிகள் தொடங்கி மாபெரும் திமிங்கலங்கள் வரையாக பரிணாம வளர்ச்சியடைந்தன.
  • இந்த இனங்களுக்கு “Durlstotherum newmani” எனப் பெயரிடப்பட்டுள்ளன.
  • சார்லீ நியூமேன் என்ற தொல்பொருள் ஆய்வாளரின் பெயர் இந்த உயிரினத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்