145 மில்லியன் ஆண்டுகள் பழமையான எலி போன்ற உயிரினத்தின் தொல்படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவையே மனித இனத்தின் மிகவும் பழமையான பாலூட்டி மூதாதையர்கள் எனக் கருதப்படுகின்றன.
இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் டார்ஸட் நாட்டின் ஜீராஸிக் கடற்கரையில் இந்தப் படிமங்களைக் கண்டறிந்துள்ளனர்.
மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்த பாலூட்டிகளின் வரிசையில் இந்த உயிரினம் மிகப் பழமையானதாகும்.
இந்தப் பாலூட்டி வகைகள் காலப்போக்கில் மிகச் சிறிய பிக்மீ ஷ்ரூ (pigmy shrews) எலிகள் தொடங்கி மாபெரும் திமிங்கலங்கள் வரையாக பரிணாம வளர்ச்சியடைந்தன.
இந்த இனங்களுக்கு “Durlstotherum newmani” எனப் பெயரிடப்பட்டுள்ளன.
சார்லீ நியூமேன் என்ற தொல்பொருள் ஆய்வாளரின் பெயர் இந்த உயிரினத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது.