14வது இந்திய உறுப்பு தான தினம் - ஆகஸ்ட் 03
August 7 , 2024
109 days
181
- மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த ஒரு விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- இந்தியாவில் உறுப்பு தான தினம் ஆனது 2010 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப் படுகிறது.
- முன்னதாக, இந்த நாள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 27 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது.
- 2023 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 03 ஆம் தேதியன்று இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.
- 1994 ஆம் ஆண்டு இதே நாளில் தான், இந்தியாவில் முதன்முதலில் வெற்றிகரமாக உயிரிழந்த நபரிடமிருந்து இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
- 1994 ஆம் ஆண்டு ஜூலை 08 ஆம் தேதியன்று, இந்தியாவில் மனித உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை சட்டம், 1994 ஆனது இயற்றப்பட்டது.
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆனது ஜூலை மாதத்தினை இந்தியாவில் உறுப்பு தான மாதமாக அறிவித்துள்ளது.
Post Views:
181