TNPSC Thervupettagam

14வது உமிழ்வு இடைவெளி அறிக்கை 2023

November 27 , 2023 363 days 256 0
  • சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது (UNEP), ‘உமிழ்வு இடைவெளி அறிக்கை 2023: முறியடிக்கப்பட்ட உச்சம் – வெப்பநிலை புதிய உச்சத்தைத் தொட்டது, எனினும் உலக நாடுகள் உமிழ்வைக் குறைக்கத் தவறிவிட்டது (மீண்டும்)’ என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட புவி வெப்பமயமாதலை சுமார் 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வரம்பிற்குள் கட்டுப்படுத்த 14 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது.
  • உலகின் அதிக வருமானம் பெறும் 10 சதவீதத்தினர், மொத்த உமிழ்வுகளில் சுமார் 45-49 சதவீதத்தை உருவாக்குகின்றனர், அதே சமயம் கடை நிலையில் உள்ள 50 சதவீத வருமானம் பெறுவோர் வெறும் 7-13 சதவீதப் பங்களிப்பை அளிக்கின்றனர்.
  • வெப்பமயமாதலை 1.5-2 டிகிரி செல்சியஸ் என்ற வரம்பிற்குள் கட்டுப்படுத்த, 2030 ஆம் ஆண்டிற்குள் 28 முதல் 42% வரை உமிழ்வினைக் குறைப்பது அவசியம் ஆகும்.
  • G20 நாடுகள் தற்போது உலகளாவிய உமிழ்வில் 76% பங்கினை கொண்டுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில், ஆற்றல் வழங்கீட்டு துறை ஆனது 20.9 ஜிகா டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சமமான உமிழ்வு (GtCO2e) என்ற பங்குடன் (மொத்தத்தில் 36%) உமிழ்வின் மிகப்பெரிய மூலமாக இருந்தது.
  • 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமானது, இதுவரையில் பதிவு செய்யப்படாத அதிக வெப்பமான செப்டம்பர் மாதமாக இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டில், உலகளாவிய உமிழ்வு 57.4 ஜிகா டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சமமானதாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்