சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது (UNEP), ‘உமிழ்வு இடைவெளி அறிக்கை 2023: முறியடிக்கப்பட்ட உச்சம் – வெப்பநிலை புதிய உச்சத்தைத் தொட்டது, எனினும் உலக நாடுகள் உமிழ்வைக் குறைக்கத் தவறிவிட்டது (மீண்டும்)’ என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட புவி வெப்பமயமாதலை சுமார் 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வரம்பிற்குள் கட்டுப்படுத்த 14 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது.
உலகின் அதிக வருமானம் பெறும் 10 சதவீதத்தினர், மொத்த உமிழ்வுகளில் சுமார் 45-49 சதவீதத்தை உருவாக்குகின்றனர், அதே சமயம் கடை நிலையில் உள்ள 50 சதவீத வருமானம் பெறுவோர் வெறும் 7-13 சதவீதப் பங்களிப்பை அளிக்கின்றனர்.
வெப்பமயமாதலை 1.5-2 டிகிரி செல்சியஸ் என்ற வரம்பிற்குள் கட்டுப்படுத்த, 2030 ஆம் ஆண்டிற்குள் 28 முதல் 42% வரை உமிழ்வினைக் குறைப்பது அவசியம் ஆகும்.
G20 நாடுகள் தற்போது உலகளாவிய உமிழ்வில் 76% பங்கினை கொண்டுள்ளன.
2022 ஆம் ஆண்டில், ஆற்றல் வழங்கீட்டு துறை ஆனது 20.9 ஜிகா டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சமமான உமிழ்வு (GtCO2e) என்ற பங்குடன் (மொத்தத்தில் 36%) உமிழ்வின் மிகப்பெரிய மூலமாக இருந்தது.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமானது, இதுவரையில் பதிவு செய்யப்படாத அதிக வெப்பமான செப்டம்பர் மாதமாக இருந்தது.
2022 ஆம் ஆண்டில், உலகளாவிய உமிழ்வு 57.4 ஜிகா டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சமமானதாக இருந்தது.