TNPSC Thervupettagam

14வது உலக நறுமணப் பொருட்கள் மாநாடு

September 23 , 2023 283 days 320 0
  • 14வது உலக நறுமணப் பொருட்கள் மாநாடு ஆனது (WSC) நவி மும்பையில் உள்ள வாஷி எனுமிடத்தில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்ச்சியானது இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், பல்வேறு வர்த்தக அமைப்புகள் மற்றும் ஏற்றுமதி மன்றங்கள் ஆகியவற்றினால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு உலக நறுமணப் பொருட்கள் மாநாட்டின் கருத்துரு, நோக்கம் 2030 : S-P-I-C-E-S (நிலைத்தன்மை, உற்பத்தித் திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, சிறப்பு மற்றும் பாதுகாப்பு) என்பதாகும்.
  • பிராந்திய நறுமணப் பொருள் வளங்கள்:
    • கருமிளகு: கேரளா, கர்நாடகா மற்றும் பிற தென் மாநிலங்களில் விளைகிறது.
    • ஏலக்காய்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பெருமளவில் உற்பத்தி செய்யப் படுகிறது.
    • மஞ்சள்: ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பயிரிடப் படுகிறது.
    • மிளகாய்: ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகியவை மிளகாய் உற்பத்திக்குப் புகழ் பெற்றவை.
    • சீரகம்: ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் விளைகிறது.
    • கொத்தமல்லி: ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்