TNPSC Thervupettagam

14வது உலக நறுமணப் பொருட்கள் மாநாடு

October 28 , 2022 633 days 341 0
  • 14வது உலக நறுமணப் பொருட்கள் மாநாடானது அடுத்த ஆண்டு மகாராஷ்டிராவின் மும்பை நகரில் நடைபெற உள்ளது.
  • இது நறுமணப் பொருட்கள் துறையின் நிலை மற்றும் சவால்கள் பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்கான ஒரு தளத்தை உருவாக்கும் வகையிலான உலகளாவிய நறுமணப் பொருட்கள் துறையின் சந்திப்பாகும்.
  • இது முதன்முறையாக 1990 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • அதன் பின்னர், கடந்த 30 ஆண்டுகளில் 13 மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
  • இந்த 14வது மாநாட்டினை இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் ஏற்பாடு செய்ய உள்ளது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, "குறிக்கோள் 2030: SPICES (நிலைத்தன்மை – உற்பத்தித் திறன் - புதுமை - ஒத்துழைப்பு - சிறப்பு மற்றும் பாதுகாப்பு)" என்பதாகும்.
  • 2023 ஆம் ஆண்டு உலக நறுமணப் பொருட்கள் மாநாடானது, G20 நிகழ்வாக ஏற்பாடு செய்யப் பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்