14வது வருடாந்திர ஏஜிஸ் கிரஹாம் பெல் விருது வழங்கும் விழாவில் மூன்று விருதுப் பிரிவுகளில் தகவல் தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையமானது (C-DOT) முதல் இடத்தினைப் பெற்றுள்ளது.
அதன் முன்னோடிமிக்க ASTR என்ற திட்டத்திற்காக "செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் புதுமை" என்ற பிரிவில் கூகுள் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து இந்த முதல் விருதினைப் பெற்றது.
"சமூக நலனில் புதுமை" என்ற பிரிவில் வழங்கப்பட்ட இரண்டாவது விருதானது, அதன் CEIR (மத்திய உபகரண அடையாளப் பதிவேடு) தீர்வுக்காக வழங்கப்பட்டுள்ளது.
குவாண்டம் அடிப்படையிலான விசை பகிர்வு (QKD) தயாரிப்புப் பொருளுக்காக "தொலைத் தொடர்புகளில் புதுமை" என்ற பிரிவில் மூன்றாவது விருது வழங்கப்பட்டு உள்ளது.
இந்த விருதானது ஏஜிஸ் தரவு அறிவியல் கல்வி நிறுவனத்தினால் 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்த விருதானது தொலைபேசியின் தந்தை மற்றும் சிறந்தக் கண்டுபிடிப்பாளரான அலெக்சாண்டர் கிரஹாம் பெல் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப் படுகிறது.