TNPSC Thervupettagam

14வது வருடாந்திர ஏஜிஸ் கிரஹாம் பெல் விருதுகள்

April 3 , 2024 89 days 170 0
  • 14வது வருடாந்திர ஏஜிஸ் கிரஹாம் பெல் விருது வழங்கும் விழாவில் மூன்று விருதுப் பிரிவுகளில் தகவல் தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையமானது (C-DOT) முதல் இடத்தினைப் பெற்றுள்ளது.
  • அதன் முன்னோடிமிக்க ASTR என்ற திட்டத்திற்காக "செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் புதுமை" என்ற பிரிவில் கூகுள் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து இந்த முதல் விருதினைப் பெற்றது.
  • "சமூக நலனில் புதுமை" என்ற பிரிவில் வழங்கப்பட்ட இரண்டாவது விருதானது, அதன் CEIR (மத்திய உபகரண அடையாளப் பதிவேடு) தீர்வுக்காக வழங்கப்பட்டுள்ளது.
  • குவாண்டம் அடிப்படையிலான விசை பகிர்வு (QKD) தயாரிப்புப் பொருளுக்காக "தொலைத் தொடர்புகளில் புதுமை" என்ற பிரிவில் மூன்றாவது விருது வழங்கப்பட்டு உள்ளது.
  • இந்த விருதானது ஏஜிஸ் தரவு அறிவியல் கல்வி நிறுவனத்தினால் 2010 ஆம்  ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இந்த விருதானது தொலைபேசியின் தந்தை மற்றும் சிறந்தக் கண்டுபிடிப்பாளரான அலெக்சாண்டர் கிரஹாம் பெல் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்