பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை 15வது நிதிக்குழுவை (Finance Commission) அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த முறை புதிதாக அமைக்கப்பெறும் நிதிக் குழுவானது மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி வருவாய் மூலங்களின் மேல் GSTஆல் ஏற்பட்ட தாக்கங்களையும் கணக்கில் கொள்ள உள்ளது.
நிதிக்குழு
நாட்டின் வரி வருவாய் மூலங்களை ஆராய்ந்து, அவ்வரிகளின் மூலம் வரும் வருவாயை மாநிலங்களுக்கிடையே பகிர்வதற்கு தேவையான வரைவுக் கொள்கை மற்றும் வழிமுறைகளை பரிந்துரை செய்யும் குழுவே நிதிக்குழுவாகும்.
அரசியலமைப்பு விதி 280-ன் படி அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிதிக்குழு அமைக்கப்பட வேண்டும். அவ்வாறே தொடரும் நிதிக்குழுவானது ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை புதிதாக அமைக்கப்படும்.
அரசியலமைப்பு விதி 280 (1)-ன் கீழ் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒருமுறை நிதிக்குழுவை அமைப்பது கட்டாயமாகும்.
நிதிக்குழுவானது ஓர் அரசியலமைப்பு மற்றும் பகுதி நிதி அமைப்பாகும் (Quasi – Judicial Body).
நிதிக்குழு (இதர ஏற்பாடுகள்) சட்டம் 1951 ((Finance Commission – Miscellaneous Provision) Act 1951) ஆனது கூடுதலாக நிதிக்குழு உறுப்பினர்களின் தகுதி, நியமனம், தகுதி நீக்கம், பதவிக் காலம், அதிகாரம் போன்றவற்றை விளக்குகின்றன.
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை குடியரசுத் தலைவரால் நிதிக் குழு அமைக்கப்படுகின்றது.
நிதிக்குழுவால் அளிக்கப்படும் பரிந்துரைகளானது ஆலோசனைத் தன்மை (Advisory) உடையனவே அன்றி மத்திய அரசின் மேல் பிணைப்பை (Binding) கொண்டதல்ல.
வரிவருவாய்களை மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளிடையே பகிர்ந்தளிப்பதற்கு தேவையான கொள்கைகளை பரிந்துரைக்க இக்குழு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது.
14-வது நிதிக்குழுவின் தலைவர் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னரான Y.V.ரெட்டி ஆவார்.
இது 2013-ல் அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரைகள் 2020-ஆம் ஆண்டு முடிவுக்கு வர உள்ளன.
15வது நிதிக் குழுகளின் பரிந்துரைகள் 2020 முதல் 2025 வரை நடைமுறையில் இருக்கும்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினுடைய தரவுகளின் பயன்பாட்டின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையே நிதியை பகிர்ந்தளிக்க 14வது நிதிக்குழு பரிந்துரை செய்திருக்கிறது.
இதுவரை 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெப்பின் தரவுகளே 14வது நிதிக்குழு வரை பயன்படுத்தப்பட்டுள்ளது.