TNPSC Thervupettagam

15வது நிதிக்குழு

November 23 , 2017 2559 days 10496 0
  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை 15வது நிதிக்குழுவை (Finance Commission) அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்த முறை புதிதாக அமைக்கப்பெறும் நிதிக் குழுவானது மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி வருவாய் மூலங்களின் மேல் GSTஆல் ஏற்பட்ட தாக்கங்களையும் கணக்கில் கொள்ள உள்ளது.
நிதிக்குழு
  • நாட்டின் வரி வருவாய் மூலங்களை ஆராய்ந்து, அவ்வரிகளின் மூலம் வரும் வருவாயை மாநிலங்களுக்கிடையே பகிர்வதற்கு தேவையான வரைவுக் கொள்கை மற்றும் வழிமுறைகளை பரிந்துரை செய்யும் குழுவே நிதிக்குழுவாகும்.
  • அரசியலமைப்பு விதி 280-ன் படி அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிதிக்குழு அமைக்கப்பட வேண்டும். அவ்வாறே தொடரும் நிதிக்குழுவானது ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை புதிதாக அமைக்கப்படும்.
  • அரசியலமைப்பு விதி 280 (1)-ன் கீழ் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒருமுறை நிதிக்குழுவை அமைப்பது கட்டாயமாகும்.
  • நிதிக்குழுவானது ஓர் அரசியலமைப்பு மற்றும் பகுதி நிதி அமைப்பாகும் (Quasi – Judicial Body).
  • நிதிக்குழு (இதர ஏற்பாடுகள்) சட்டம் 1951 ((Finance Commission – Miscellaneous Provision) Act 1951) ஆனது கூடுதலாக நிதிக்குழு உறுப்பினர்களின் தகுதி, நியமனம், தகுதி நீக்கம், பதவிக் காலம், அதிகாரம் போன்றவற்றை விளக்குகின்றன.
  • ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை குடியரசுத் தலைவரால் நிதிக் குழு அமைக்கப்படுகின்றது.
  • நிதிக்குழுவால் அளிக்கப்படும் பரிந்துரைகளானது ஆலோசனைத் தன்மை (Advisory) உடையனவே அன்றி மத்திய அரசின் மேல் பிணைப்பை (Binding) கொண்டதல்ல.
  • வரிவருவாய்களை மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளிடையே பகிர்ந்தளிப்பதற்கு தேவையான கொள்கைகளை பரிந்துரைக்க இக்குழு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது.
  • 14-வது நிதிக்குழுவின் தலைவர் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னரான Y.V.ரெட்டி ஆவார்.
  • இது 2013-ல் அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரைகள் 2020-ஆம் ஆண்டு முடிவுக்கு வர உள்ளன.
  • 15வது நிதிக் குழுகளின் பரிந்துரைகள் 2020 முதல் 2025 வரை நடைமுறையில் இருக்கும்.
  • 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினுடைய தரவுகளின் பயன்பாட்டின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையே நிதியை பகிர்ந்தளிக்க 14வது நிதிக்குழு பரிந்துரை செய்திருக்கிறது.
  • இதுவரை 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெப்பின் தரவுகளே 14வது நிதிக்குழு வரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்