TNPSC Thervupettagam

15வது நிதி ஆணையம் நிதி ஒதுக்கீடு

April 25 , 2020 1549 days 756 0
  • மத்திய நிதித்துறை அமைச்சகமானது மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான அவற்றின் பங்கான ரூ.46,038 கோடியை விடுவித்துள்ளது.
  • இந்த வரி ஒதுக்கீடானது 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.  
  • பங்கிடப்படும் வரிகளின் நிகர வருமானக் கணக்கீடானது 2020-21 பட்ஜெட் அறிக்கையின்படி எதுவும் மாற்றங்கள் மேற்கொள்ளப் படாமல் தொடரப் பட்டு உள்ளது. 
  • நிதி ஆண்டு 2021 ஆம் ஆண்டிற்கான தனது இடைக்கால அறிக்கையில், நிதி ஆணையமானது மாநிலங்களுக்கான மத்திய வரிகளின் ஒதுக்கீட்டுப் பங்கை 1% என்ற அளவில் குறைத்து 41% ஆக நிர்ணயித்துள்ளது. 
  • அப்போதைய ஜம்மு காஷ்மீர் 2 ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளதன் காரணமாக இவ்வாறு குறைக்கப் பட்டுள்ளது.
  • நிதி ஆணையமானது ஒரு மாநிலத்தின் மக்கள் தொகைக்கு 15 சதவீதம் என்ற அளவுகோலை நிர்ணயித்துள்ளது. இதனை 14வது நிதி ஆணையத்தினால் நிர்ணயிக்கப் பட்டிருந்த 17.5% என்ற அளவிலிருந்து அது குறைத்துள்ளது.
  • ஆனால் இது மக்கள் தொகைக் காரணிகளின் மீதான அளவுகோலை 10%லிருந்து 12.5% ஆக அதிகரித்துள்ளது.
  • ஏப்ரல் மாதத்திற்கான மத்திய வரிகளின் பங்கில் மிக அதிக அளவானது உத்தரப் பிரதேசத்திற்கும், அதற்கு அடுத்து பீகார் மாநிலத்திற்கும் செல்ல இருக்கின்றன.
  • கோவா மற்றும் சிக்கிம் ஆகியவை மத்திய வரிகளின் குறைந்த அளவைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்