இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் ஆகியோர் இணைந்து 15-வது பிரவாஸி பாரதிய திவாஸிற்கான (PBD - Pravasi Bharatiya Diwas) www.pbindia.gov.in என்ற இணைய தளத்தை தொடங்கி வைத்தனர்.
15-வது பிரவாஸி பாரதிய திவாஸ் மாநாடானது 2019 ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் 23 வரை உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெறவிருக்கிறது.
PBD - 2019-ன் கருத்துரு, “புதிய இந்தியாவை கட்டமைப்பதில் இந்தியப் புலம் பெயர்ந்தவர்களின் பங்கு” ஆகும்.
இளைஞர் பிரவாஸி பாரதிய திவாஸின் தொடக்க விழாவானது மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகத்துடன் இணைந்து நடைபெறவிருக்கிறது.
பிரவாஸி பாரதிய திவாஸ் மாநாடு இந்திய அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சியாகும். இது அயல்நாட்டில் வாழும் இந்தியர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் இணைவதற்கும் ஒரு முக்கியமான தளமாக செயல்படுகிறது.