TNPSC Thervupettagam

15 நாட்கள் அளவிலான கடன் நடவடிக்கை குறியீட்டுப் புதுப்பிப்புகள்

January 12 , 2025 4 days 51 0
  • 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் அனைத்து கடன் வழங்குநர்களும் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் கடன் வாரியப் பதிவுகளைப் புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கட்டளையிட்டுள்ளது.
  • இந்த ஒழுங்குமுறையானது கடன் வாங்குபவர்களின் நிதி நடவடிக்கைகளின் மிகவும் துல்லியமான மற்றும் மிகச் சரியான நேரத்திலான தகவல்களை வழங்குவதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது கடன் நடவடிக்கை மீதான மதிப்பீடுகள் எவ்வாறு கணக்கிடப்பட்டு வெளியிடப் படுகின்றன என்பதை முற்றிலுமாக மாற்றுகிறது.
  • ஒரு வரலாற்று ரீதியாக, கடன் வாரியங்கள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே கடன் வழங்குபவர்களிடமிருந்து புதுப்பிப்புகளைப் பெற்றன.
  • இந்தக் கட்டளையானது, கடன் வாங்குபவர்கள் தமது பழையக் கடன்களைத் திருப்பிச் செலுத்த புதிய கடன்களை எடுத்து, நீடித்த கடன் சுழற்சிகளை உருவாக்குகின்ற அசல் தொகையினைத் திருப்பி செலுத்த வேண்டிய அவசியமற்ற கடன் பெறல் முறைகளை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்