TNPSC Thervupettagam

15 நிர்வாக ஆணைகள் – அமெரிக்கா

January 26 , 2021 1330 days 563 0
  • ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் முதல் நாளில் 15 நிர்வாக ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.
  • இவர் கடந்த 4 ஆண்டுகளில் இவருக்கு முன்பு அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்பின் முக்கியக் கொள்கைகளைச் செயல்பாட்டிலிருந்து நீக்கியுள்ளார்.
  • அதிபர் ஜோ பைடனால் கையெழுத்திடப்பட்ட முதல் நிர்வாக ஆணை கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு வேண்டி மைய அரசின் எதிர்வினையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கோவிட்-19 குறித்ததாகும்.
  • இந்த ஆணையானது பொது இடங்களில் பொது மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது மற்றும் முகக் கவசம் அணிவது ஆகியவற்றைக் கட்டாயமாக்கி உள்ளது.
  • ட்ரம்பின் ஒரு திட்டமான மெக்சிகோவுடனான எல்லைச் சுவர் கட்டுமானத்தை நிறுத்தி வைத்தல், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல், முஸ்லீம் பயணத் தடையை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவை அவரின் இதர சில முக்கிய ஆணைகளாகும்.
  • மேலும் இவர் உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதையும் நிறுத்தி வைத்துள்ளார்.
  • மேலும் இவர் முக்கியமான எக்ஸ்எல் என்ற குழாய்த் தொடர் திட்டத்திற்கு வழங்கப் பட்ட அதிபரது  ஒப்புதலையும் ரத்து செய்துள்ளார்.
  • XL முக்கிய குழாய்த் தொடர் அமைப்பு என்பது அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் ஒரு எண்ணெய் குழாய்த் தொடர் அமைப்பாகும்.
  • மேலும் இவர் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலிருந்து அமெரிக்கக் குடியுரிமை அல்லாதவர்களை விலக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டத்தை நீக்குதல் தொடர்பான ஒரு ஆணையிலும் கையெழுத்திட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்