TNPSC Thervupettagam

15-வது ஆசிய ஊடக மாநாடு

May 11 , 2018 2394 days 702 0
  • புது தில்லியில் 15-வது ஆசிய ஊடக மாநாட்டை (Asia Media Summit - AMS-2018) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், புது தில்லியில் உள்ள இந்திய பெரு தகவல் தொடர்புகளுக்கான நிறுவனம் (Indian Institute of Mass Communication - IIMC), இந்திய ஒளிபரப்பு பொறியியல் ஆலோசனை நிறுவனம் (Broadcast Engineering Consultants India Limited - BECIL) ஆகியவற்றுடன் இணைந்து நடத்துகின்றது.

  • இந்த வருடாந்திர மாநாட்டின் கருத்துருவானது “ஆசியாவிற்கும் அதைத் தாண்டியும் நமது கதைகளைக் கூறுதல்” (“Telling our Stories- Asia and More”) என்பதாகும். இக்கருத்துரு இப்பிராந்தியத்தில் ஊடகத் துறையில் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்திட திட்டம் தீட்டுகிறது,
  • இந்த மாநாடானது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நடத்தப்படும் பெருமைமிகு வருடாந்திர நிகழ்வாகும். இந்நிகழ்வானது ஆசிய பசுபிக் ஒளிபரப்பிற்கான மேம்பாட்டு நிறுவனம் தனது பங்குதாரர்களோடும் சர்வதேச நிறுவனங்களோடும் இணைந்து நடத்தப்படுகின்றது.
  • இந்தியா முதன் முதலாக இந்நிகழ்ச்சியை நடத்துகின்றது.

ஆசிய பசுபிக் ஒளிபரப்பு மேம்பாட்டிற்கான நிறுவனம்

  • 1977-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், மின்னணு ஊடக மேம்பாட்டுத் துறையில் ஐக்கிய நாடுகள் ஆசிய பசுபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் நாடுகள் (United Nations Economic and Social Commission for Asia and the Pacific-UN-ESCAP) ஆகியவற்றிற்கு சேவையளித்திடும் ஒரு புதுமையான, அரசுகளுக்கிடையேயான பிராந்திய அமைப்பாகும்.
  • இந்நிறுவனம் மலேசிய அரசால் நிர்வகிக்கப்படுகின்றது. இதன் தலைமைச் செயலகம் கோலாலம்பூரில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்