தெலுங்கானா அரசாங்கத்தின் வருடாந்திர நிகழ்ச்சியான பயோ ஆசியா (Bio Asia) மாநாடு இந்தியாவின் உயிர் அறிவியல் முனையமான (Life Science hub of India) ஹைராபாத்தில் அண்மையில் நடைபெற்றது.
2018ஆம் ஆண்டிற்கான பயோ ஆசியா மாநாட்டின் கருத்துரு “சரியான நேரம், இப்பொழுதே” (Right Time; Right Now) என்பதாகும்.
மருத்துவப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (Pharmaceutical Export Promotion Council- Pharmexcil) மற்றும் ஆசிய பயோடெக் சங்கக் கூட்டமைப்பு (FABA – Federation of Asian Biotech Association), ஆகியவற்றுடன் இணைந்து தொழிற்சாலை மற்றும் வர்த்தகத் துறையானது இந்த 15வது பயோ ஆசியா மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளது.
அயர்லாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இந்த 15வது பயோ ஆசியா மாநாட்டின் சர்வதேச பங்களிப்பாளர்களாகும் (Partners).
குஜராத், அஸ்ஸாம், இராஜஸ்தான் ஆகியவை இம்மாநாட்டிற்கான இந்தியாவின் மாநில பங்களிப்பாளர்களாகும் (Partners).
உயிர் அறிவியலின் மதிப்புச் சங்கிலியில் தற்போது உள்ள வாய்ப்புகள், சுகாதார சேவை அளிப்பிற்கு (healthcare delivery) புதிய செயல்மாதிரிகளை கண்டுபிடிப்பதற்கான புத்தாக்க வழிகள், வேகமான மாற்றத்தைக் கையாளுவதற்கான உத்திகள் போன்றவற்றின் மீது பயோ ஆசியா 2018 மாநாடு நடத்தப்பட்டுள்ளது.