TNPSC Thervupettagam

15வது பயோ ஆசியா 2018

March 2 , 2018 2333 days 702 0
  • தெலுங்கானா அரசாங்கத்தின் வருடாந்திர நிகழ்ச்சியான பயோ ஆசியா (Bio Asia) மாநாடு இந்தியாவின் உயிர் அறிவியல் முனையமான (Life Science hub of India) ஹைராபாத்தில் அண்மையில் நடைபெற்றது.
  • 2018ஆம் ஆண்டிற்கான பயோ ஆசியா மாநாட்டின் கருத்துரு “சரியான நேரம், இப்பொழுதே” (Right Time; Right Now) என்பதாகும்.
  • மருத்துவப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (Pharmaceutical Export Promotion Council- Pharmexcil) மற்றும் ஆசிய பயோடெக் சங்கக் கூட்டமைப்பு (FABA – Federation of Asian Biotech Association), ஆகியவற்றுடன் இணைந்து தொழிற்சாலை மற்றும் வர்த்தகத் துறையானது இந்த 15வது பயோ ஆசியா மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளது.
  • அயர்லாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இந்த 15வது பயோ ஆசியா மாநாட்டின் சர்வதேச பங்களிப்பாளர்களாகும் (Partners).
  • குஜராத், அஸ்ஸாம், இராஜஸ்தான் ஆகியவை இம்மாநாட்டிற்கான இந்தியாவின் மாநில பங்களிப்பாளர்களாகும் (Partners).
  • உயிர் அறிவியலின் மதிப்புச் சங்கிலியில் தற்போது உள்ள வாய்ப்புகள்,  சுகாதார சேவை அளிப்பிற்கு   (healthcare delivery)    புதிய செயல்மாதிரிகளை கண்டுபிடிப்பதற்கான  புத்தாக்க வழிகள், வேகமான மாற்றத்தைக் கையாளுவதற்கான உத்திகள் போன்றவற்றின் மீது பயோ ஆசியா 2018 மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்