TNPSC Thervupettagam

15வது ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாடு

November 25 , 2020 1378 days 592 0
  • இது 2020 ஆம் ஆண்டில் நடைபெறும் இரண்டாவது ஜி20 தலைவர்கள் கூட்டமாகும்.
  • இந்த உச்சி மாநாட்டின் தலைமை சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் ஆவார்.
  • இதன் கருத்துரு '21 ஆம் நூற்றாண்டின் அனைவருக்குமான வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது' என்பதாகும்.
  • சவூதி அரேபியா மற்றும் இத்தாலியுடன் ஜி20 முத்தரப்பு குழுவின் ஒரு பகுதியாக இந்தியா இருக்கும்.
  • இது மூன்று உறுப்பினர் நாடுகளைக் கொண்ட ஒரு குழுவாகும்.
  • இது தற்போதைய, முந்தைய மற்றும் அடுத்து தலைமை தாங்கும் நாடுகளால் ஆனது.
  • ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை 2020 ஆம் ஆண்டின் டிசம்பர் 1 ஆம் தேதி இத்தாலி நாடு மேற்கொள்ளும்.
  • 2021 ஆம் ஆண்டின் உச்சி மாநாடு இத்தாலியின் ரோம் நகரில் நடத்த திட்டமிடப் பட்டு உள்ளது.
  • இந்தோனேசியா இந்த மாநாட்டை 2022 ஆம் ஆண்டில் நடத்த இருக்கின்றது.
  • இந்தியா இந்த மாநாட்டை 2023 ஆம் ஆண்டில் டெல்லியில் நடத்த இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்